வைரம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள் இதுதான்! (Exclusive Deals)
ஒவ்வொரு வைரமும் தனித்தன்மை வாய்ந்தது. அதிக விலை கொடுத்து வாங்கும் வைர நகைகளை, சரியாகத் தேர்ந்தெடுக்க, இந்த 5 டிப்ஸ் உங்களுக்கு நிச்சயம் உதவும்!
வைரத்தின் வெட்டு (CUT): சரியாக வெட்டப்பட்ட வைரம் தன்னுடைய ஒவ்வொரு முகப்பிலும் ஒளியை எதிரொலித்து மின்னும். மாறாக ஆழமாக அல்லது அகலமாக வெட்டப்பட்ட வைரத்தில் ஒளி பக்கவாட்டிலோ, கீழ்ப் புறத்திலோ வெளியேறி பார்ப்பதற்கு சற்று டல்லாக இருக்கும். மேலும் வைரத்தின் வெட்டுதான் அதன் வடிவத்தைத் தீர்மானிக்கிறது. வட்டம், ஓவல், சதுரம், மரகதம், பியர், பிரின்சஸ், கோமேதகம் அல்லது குஷன் வடிவங்கள் மிகப்பிரபலம்.
இத மறந்துடாதீங்க! - வைரம் வாங்கும்போது அதை கையில் எடுத்துப் பாருங்க, வானவில்லின் வண்ணங்களை உங்களால் காண முடிந்தால் அது நல்ல வைரம்தான். உங்க ஜுவல்லர்கிட்ட வேற ‘கட்’களையும் காண்பிக்கச் சொல்லி பாருங்க.
தெளிவு (கிளாரிட்டி): 10 முறை பெரிதுபடுத்திப் பார்த்து, அதில் உள்ள சிறு கீறல்கள் வடுக்கள், எண், வகை, நிறம் மற்றும் அளவுகளைப் பொறுத்து அதற்கு ஒரு தெளிவு அளவீடு கொடுக்கப்படும் (Clarity Grade). இதில் கீறல்களே இல்லாத அரிய வகை “குறையில்லா” வைரங்கள் விலை அதிகமாக இருக்கும்.
இத மறந்துடாதீங்க! - வைரத்தோட அழகுல மயங்கிடாம, வேற வேற கிளாரிட்டி உள்ள வைரங்களை பார்த்து முடிவு பண்ணுங்க!
நிறம் : பேன்சி வண்ணங்கள் கொண்ட வைரங்கள் மிகவும் அரிதானவை. பச்சை, நீளம், மஞ்சள், ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, மற்றும் மிகவும் அரிதாகக் கிடைக்கும் சிவப்பு வண்ணத்திலும் கிடைக்கிறது. இந்த அரிய வகை வண்ணங்களை உடைய வைரங்கள் வண்ணத்தின் அடர்த்தியால் மதிப்பிடப்படும்.
இத மறந்துடாதீங்க! - இந்த வைரங்களைக் காண்பதற்கும், அணிந்து பார்ப்பதற்கும் பெரிய வேறுபாடு உள்ளதாக இருக்கும். அதனால், வைரம் வாங்கும்போது, நீங்கள் வாங்கப்போகும் வைரத்தை கைகளில் எடுத்து வைத்துப் பார்த்து முடிவு செய்யுங்கள்.
கேரட்: வைரத்தைப் பொறுத்தவரை, பெரிதான வைரங்கள் அரிதானவை. (அதாவது, ஒரு காரட் வைரத்துக்கு, அதே வண்ணம், கிளாரிட்டி மற்றும் கட் கொண்ட இரண்டு 1/2 காரட் வைரங்களைவிட மதிப்பு அதிகம்.)
இத மறந்துடாதீங்க! - வைரங்கள் வெட்டப்படும் விதத்தைப் பொறுத்து, அவை பெரிதாகத் (அல்லது சிறியதாக) தெரியும். அதனால், பெரிய வைரத்தைப் பார்த்தவுடன் வாங்குற முடிவுக்குப் போயிடாதீங்க!
விலை: விலையுயர்ந்த பொருட்களை வாங்கும்போது விலைய பார்க்கக்கூடாதுன்னு சொன்னா நம்பாதீங்க. செய்கூலி, சேதாரம், சில்லறை விற்பனை செலவுகள்னு ஒரு இடத்துல குறைச்சு ஒரு இடத்துல அதிகப்படுத்துவாங்க.
இத மறந்துடாதீங்க! - “பிரில்லியன்ட் கட் கோல்ட் & டைமண்ட் ஜுவல்லரி” மொத்த வியாபாரம் செய்வதாலும், நகைகளை சொந்தமாகத் தயாரிப்பதாலும், நேரடியாக அவர்களிடமே வாங்குவதாலும் சுமார் 40% குறைந்த விலையில் கொடுக்க முடிகிறது. இதனால் பல ஆயிரம் ரூபாய்கள் குறைகிறது.
“பிரில்லியண்ட் கட்டின்” நகைகள் கைவினை நகைகளைக் காட்டிலும் 50% இலேசானதாகவும், வலுவானதாகவும் இருக்கிறது.நகையின் மாதிரி முன்கூட்டியே காண்பித்து, சம்மதம் பெறுவதால், வாங்குபவர்களுக்கும் முழு திருப்தி உண்டாகிறது.
நீங்க வைர நகை வாங்கப் போகும்போது மேலே சொன்ன டிப்ஸுடன், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நகை வகைகளை இருப்பில் வைத்துள்ள “பிரில்லியன்ட் கட் கோல்ட் & டைமண்ட் ஜுவல்லரி” யின் வேப்பேரி அலுவலகத்திற்குச் சென்று, நகைகளைப் பற்றிய சந்தேகங்களை நேரிலேயே தீர்த்துக்கொள்ளலாம். உங்கள் மனதுக்குப் பிடித்த வைரத்தை ஆன்லைனில் தேர்வு செய்து குறைந்த விலையிலும் வாங்கலாம்!
Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
https://www.vikatan.com/news/miscellaneous/113916-5-tips-for-buying-diamond.html