கோவில்களில் தீபம் ஏற்றி வழிபடும்முறை ?

in Tamil Success4 years ago

கோவில்களில் வைக்கப்பட்டிருக்கும் விளக்குகளிலேயே நம் எண்ணெய் திரி போட்டு விளக்கு ஏற்றலாமா (அ ) வீட்டில் இருக்கும் பழைய (அ ) புதிய விளக்குகளை எடுத்து சென்று தீபம் ஏற்றலாமா ?இது போல் நிறைய குழப்பங்கள் இருக்கிறது .மண்விளக்குகளை தவிர கோவில்களில் எரிந்து கொண்டிருக்கும் சரவிளக்கு ,தூண்டாமணிவிளக்கு ஆகியவற்றிக்கு புதிதாக எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றலாம் தவறு கிடையாது .பயண்படுத்திய விளக்குகளை எடுக்கக்கூடாது .நாம் வீட்டில் இருந்து கிளம்பும் போது புதிய விளக்கு வாங்கி சென்று அதில் எண்ணெய் (அ )நெய் ஊற்றி விளக்கு ஏற்றலாம் .