கோவில்களில் எரிந்து கொண்டிருக்கும் தீபங்களில் இருந்து புதிய தீபம் ஏற்றலாமா ?
கோவில்களில் எரிந்து கொண்டிருக்கும் தீபத்தில் இருந்து புதிய தீபம் ஏற்ற
கூடாது என சிலர் கூறுவார்கள் காரணம் ,அவர்களுக்கு ஏதாவது பிரச்னை (அ )பாவங்கள் இருக்கும் அதை தீர்ப்பதற்காக தீபம் ஏற்றி இருப்பார்கள் , அந்த தீபத்தில் நாமும் தீபம் ஏற்றினால் அவர்களின் பிரச்னை (அ ) பாவங்கள் நம்மை வந்து சேரும் என்று தான் .முதலில் நாம் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் ,அக்னிக்கு தீட்டு கிடையாது ,இவற்றை எல்லாம் நிவர்த்தி செய்வது தான் அக்னி அதற்கு எப்படி தோஷம் வரும் ,அக்னி மிகவும் பவித்ரமானது அக்னி -ன் தன்மையை குறைக்கவே முடியாது .ஒரு அக்னி -இல் இருந்து இன்னொரு அக்னி ஐ ஏற்றும் போது அந்த தோஷங்கள் நமக்கு வரும் என்று யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை .தாராளமாக ஏற்றி கொள்ளலாம் ,தெய்வத்தின் முன்னாள் தீபம் ஏற்றினால் அந்த தோஷம் விலகிவிடுவதால் அது பரிசுத்தம் ஆகி விடுகிறது ,எனவே ஒரு தீபத்தில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றலாம் .