மனம் வார்த்தை இழந்த பொது வழிகாட்டிய வரிகள்!!!

in #thought6 years ago (edited)

கவிதை தெரியாத காரணத்தினால் தானோ.
உனக்காக எழுதுகிறது என் அறியாமை என்னும் பேனா
இன்று பிறந்த புது குழந்தையாய், உன் அன்பின் அனுபவத்தை முன்னிலையில் வைத்து.
மனதின் வலிகளையும், அன்பையும் வரிகளால் வடிக்கிறேன்.

"காதல்" என்னும் ஒரு பிணைப்பில் வாழும் "இரு முத்துக்களாக"
கடந்து சென்ற குறைந்த நாட்களில்
பேரின்பம் மட்டும் கண்ட இரு மனதுமே
கடினமான சூழநியைல் இன்று தவிப்பது ஏனோ.!

கோவமும் வருத்தமும் தான் உன் மூத்த பிள்ளை என்றால்.
என் அன்பை உன் இளைய மகனாய் தத்தெடுத்திருக்கிறாய் என்பதை என்றும் மறவாதே!!
உன் மூத்த மகன் உடன்சேர்த்து
என்னையும் புரிந்து கொள்வதும்
உன் கடமையே!

சுருங்கிய முகத்திற்கு உன் மூத்த மகன் தான் காரணம் என்றால்.
என்றும் மலரும் முகமாய்
உன் இளைய மகன் உன்னுடன் தான் பயணிக்கிறான்.
கண்கள் திறக்க கடினமாய் இருக்கும் தருணத்தில் கூட.
மூடிய
கண்களை ரசிக்க வாய்ப்பளித்து கொள்வோமே.

மலரும் நினைவுகள் கண்முன் வராத நொடிகள் இல்லை.
நிமிடத்திற்கு நிலை மாறும் மனம் கூட.
காலத்திற்கும் ஒட்டிக்கொண்ட அன்பை எதிர்த்து போவாது தவிக்கிறது.
உண்மை எதுவாயினும். உன் இளைய மகன் உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

உன்னை காண துடிக்கும் உன் இளைய மகன் நிரம்பி வழிகிறான்.
சொல்லி சமாதானப்படுத்த வார்த்தைகள் குறைகிறது.
வாழும் நாட்கள் குறைவு என்பதை மறவாமல் வாழ்வோமே இனிதாய்.
என்னைப்பெற்ற சின்ன தாயே.

இப்படிக்கு
உன் இளைய மகன்
அன்பு.

kirukal4.png

#SatchuKirukalgal #WordsRPowerful #ThoughtsBecomeReality